சாமிதான் கும்பிட்டேன்....யாக மெல்லாம் நடக்கல- ஓ.பி.எஸ்.விளக்கம்!
அதிகாலையில் சாமிதான் கும்பிட்டேன். யாகமெல்லாம் நடத்தவில்லை என துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் விளக்கமளித்துள்ளார்.
தலைமைச் செயலகத்தில் நேற்று அதிகாலையில் உள்ள தமது அறையில், ஓ.பி.எஸ் ரகசியமாக யாகம் நடத்தியதாக வெளியான செய்தி சர்ச்சையானது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும், தலைமைச் செயலகத்தில் ஓ.பி.எஸ் யாகம் நடத்தியது ஏன்? என்று கேள்வி எழுப்பி இருந்தார்.
இந்த சர்ச்சை க்கு ஓ.பி.எஸ் விளக்கமளித்துள்ளார். அறையை புதுப்பித்ததால் சாமிதான் கும்பிட்டேன். யாகம் எதுவும் நடத்தவில்லை. யாகம் நடத்தினால் முதலமைச்சர் ஆகலாம் என்ற மூட நம்பிக்கையை ஸ்டாலின் நம்புகிறாரா? என்று ஓ.பி.எஸ் கேள்வி எழுப்பினார்.
ஸ்டாலின் குழப்பத்தில் உள்ளார். எந்தப் பக்கம் சாய்ந்தால் லாபம் கிடைக்கும் என்ற நினைப்பில் ஸ்டாலின் உள்ளார் என்றும் ஓ.பி.எஸ். குற்றம் சாட்டியுள்ளார்.