மேகதாது அணை கட்ட மத்திய அரசு அனுமதி அளிக்கக் கூடாது- ராமதாஸ்
மேகதாது அணை கட்ட மத்திய அரசு அனுமதி அளிக்கக் கூடாது என பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.இது தொடர்பாக தமது ட்விட்டர் பக்கத்தில் டாக்டர் ராமதாஸ், மேகதாது அணை கட்டுவதற்கான விரிவான திட்ட அறிக்கையை மத்திய அரசிடம் கர்நாடகம் தாக்கல் செய்துள்ளது. இத்திட்டத்திற்கு தமிழகம் ஒப்புதல் அளிக்காத நிலையில், மேகதாதுவில் அணை கட்ட மத்திய அரசு அனுமதி அளிக்கக்கூடாது. நடுநிலையுடன் நடந்து கொள்ள வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
மேலும் பட்டாசு ஆலைகள் மூடப்பட்டதால் கடன் வலையில் சிக்கிய பெண் தொழிலாளி தற்கொலைக்கு முயன்றது அதிர்ச்சியளிக்கிறது. மூன்றாவது மாதமாக மூடிக்கிடக்கும் பட்டாசு ஆலைகளை மீண்டும் திறந்து, அவற்றின் பிரச்சினைகளைத் தீர்த்து அவை முழு அளவில் செயல்பட மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் டாக்டர் ராமதாஸ் கேட்டுக் கொண்டுள்ளார்.