திரிபுராவில் வீழ்த்தப்பட்ட லெனின் சிலை நெல்லையில் இன்று எழுகிறது - திரைக்கலைஞர் ரோகிணி வாழ்த்து!

நெல்லையில் 12 அடி உயர லெனின் சிலை திறக்கப்படுகிறது.

திரிபுராவில் பாஜக ஆட்சிக்கு வந்ததைக் கொண்டாடும் வகையில் பிரமாண்ட லெனின் சிலையை அடித்து நொறுக்கினர். இதற்கு பதிலடியாக திரிபுராவில் வீழ்ந்தது , நெல்லையில் எழுகிறது என்ற வாசகத்துடன் நெல்லை ரெட்டியார்பட்டியில் உள்ள மார்க்சிஸ்ட் கட்சி அலுவலகத்தில் 12 அடி உயர வெண்கலச் சிலை அமைக்கப்பட்டுள்ளது. இந்தச் சிலையை மார்க்சிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி இன்று மாலை திறந்து வைக்கிறார்.

இந்தச் சிலை அமைக்கப்பட்டதற்கு திரைக்கலைஞர் ரோகிணி வாழ்த்து தெரிவித்துள்ளார். சிலைகளை தகர்த்தாலும் லெனின் சிந்தனைகளை ஒருபோதும் தகர்க்க முடியாது என்று ரோகிணி பதிவிட்டுள்ளார். நக்கீரன் ஆசிரியர் கோபாலும் லெனின் சிலை திறப்புக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

லெனின் சிலையை தகர்த்தது போல் தமிழகத்தில் பெரியார் சிலையை தகர்ப்போம், கண்ணகி சிலையை வீழ்த்துவோம் என்று எச்சைத்தனமாக பேசிய வர்களுக்கு பதிலடியாக வார்த்தையால் சொல்லாமல் சிலையால் சொல்லியிருக்கிறார்கள் என்று நக்கீரன் கோபால் தெரிவித்துள்ளார்.

More News >>