பிப்.11-ல் ரஜினி மகள் செளந்தர்யா-விசாகன் திருமணம்- ரசிகர்கள் கலந்து கொள்ள தடை!
ரஜினி வீட்டுக்கு வரும் புது மாப்பிள்ளை ‘விசாகன்’
ரஜினி வீட்டுக்காக ‘தரகர்’ அவதாரமெடுத்த அரசியல் தலைவர்
ரஜினியின் இரண்டாவது மகள் செளந்தர்யாவுக்கும் , பிரபல தொழிலதிபர் வணங்காமுடியின் மகன் விசாகனுக்கும் திருமணம் செய்வதாக முடிவுசெய்யப்பட்டதை நமது இணையதளம்தான் முதன் முதலில் வெளியிட்டது. அண்மையில் இருவீட்டாரும் பங்கேற்க நிச்சயதார்த்தம் நடந்தது. இதில் இரு வீட்டாரையும் சேர்ந்த மிகமிக நெருங்கிய உறவுகள் 10 பேர் மட்டுமே கலந்துகொண்டனர்.
இவர்களின் திருமணம் பிப்ரவரி 11-ந்தேதி சென்னையில் நடக்கிறது. திருமணத்தையும் வரவேற்பையும் மிக எளிமையாக நடத்தச் சொல்கிறார் ரஜினி.
ஆனால், ரஜினியின் குடும்பத்தினரோ, பிரதமர் மோடி துவங்கி அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்கள், திரைத்துறை பிரபலங்கள் என அனைவரையும் அழைத்து திருமணத்தை பிரமாண்டமாக நடத்த முடிவு செய்து அதற்கான ஏற்பாடுகளைச் செய்து வருகின்றனர். அதே போல வரவேற்பை மிக மிக பிரமாண்டமாக நடத்த மணமகன் விசாகனும் அவரது தந்தையும் தொழிலதிபருமான வணங்காமுடியும் திட்டமிட்டு அதற்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.
இதற்காக, மாநிலம் மற்றும் தேசிய அளவிலான அரசியல் தலைவர்கள், திரைத்துறைப் பிரபலங்கள், பல்வேறு துறை சார்ந்த நண்பர்கள் என பலரும் அழைக்கப்படவிருக்கிறார்களாம். இந்த நிலையில், தங்கள் தலைவரின் இல்லத் திருமணத்தை கண்டுகளிக்க ரஜினியின் மக்கள் மன்றத்தினர் ஆர்வமாக இருக்கிறார்கள்.
ரசிகர்களின் இந்த விருப்பம், ரஜினியின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டிருக்கிறது. ரஜினியோ,' நோ...நோ..' என அவரது பாணியில் வேகமாக மறுத்துள்ளாராம். தங்கள் தலைவரின் இல்லத் திருமணத்தில் வி.வி.ஐ.பி.க்களுக்கு கிடைக்கும் இடத்தில் ஒரு ஓரமாக நிற்கும் பாக்கியமாவது தங்களுக்கு கிடைக்குமா? என்கிற ஏக்கத்தில் இருக்கிறார்கள் ரஜினி ரசிகர்கள்.
தமிழக ரசிகர்களால் உயர்ந்த இடத்திற்கு வந்துள்ள ரஜினி, ரசிகர்களுக்குரிய ஏக்கத்தைத் தீர்ப்பாரா?
-எழில் பிரதீபன்