நியூசி.யிலும் இந்தியா வெற்றி தொடருமா? முதல் ஒரு நாள் போட்டியில் நியூசி.பேட்டிங்!
இந்தியா -நியூசிலாந்து இடையிலான முதல் ஒரு நாள் போட்டி நேப்பியரில் தொடங்கியது.
டாஸ் வென்ற நியூசிலாந்து அணி கேப்டன் வில்லியம்சன் பேட்டிங் தேர்வு செய்தார். ஆஸ்திரேலியாவில் ஒரு நாள் மற்றும் டெஸ்ட் தொடரை வென்று சரித்திர சாதனை படைத்த உற்சாகத்தில் நியூசிலாந்து அணிக்கு எதிராக 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் களம் காண்கிறது.
இன்றைய போட்டியில் நியூசிலாந்தை ஆரம்பத்திலேயே வேகத்தில் மிரட்டினார் முகமது சமி . நியூசி.துவக்க ஆட்டக்காரர்கள் குப்டில், முன்ரோ ஆகியோரை அடுத்தடுத்து வீழ்த்தினார்.4 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 18 ரன்கள் என்ற நிலையில் நியூசி தடுமாறுகிறது.