அங்கிட்டு எய்ம்ஸ் அடிக்கல் நாட்டு விழா... இங்கிட்டு பொதுக்கூட்டம்.. மோடிக்கு கூட்டம் சேர்க்க படாதபாடுபடும் பாஜக

மதுரை எய்ம்ஸ் அடிக்கல் நாட்டு விழாவை சாக்காக வைத்து மோடி பங்கேற்கும் கட்சியின் பிரசார கூட்டத்துக்கு அதிமுக தயவில் படை திரட்ட பாஜக பக்கா பிளான் போட்டுள்ளது.

தமிழகத்தில் தனது முதலாவது தேர்தல் பிரச்சாரத்தை வரும் 27-ந்தேதி மதுரையில் தொடங்குகிறார் பிரதமர் மோடி. முதல் பொதுக்கூட்டமே பிரம்மாண்டமாக அமைய அரசு விழாவை சாதகமாக்கி பாஜக பக்கா பிளான் போட்டுள்ளது. எய்ம்ஸ் அடிக்கல் நாட்டு விழா, தேஜஸ்வி ரயில்திட்டம், ராமேஸ்வரம் நான்கு வழிச்சாலை திட்டம் போன்ற மத்திய அரசின் திட்டங்களின் தொடக்க விழா எய்ம்ஸ் அமையவிருக்கும் தோப்பூரில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. பாஜக பொதுக் கூட்ட மோ எய்ம்ஸ் விழா நடைபெறும் இடத்திலிருந்து 20 கி.மீ.தொலைவில் மண்டேலா நகரில் நடக்கிறது.

எய்ம்ஸ் விழாவுக்குத்தான் தமிழக அரசும், அதிமுகவும் கூட்டத்தை திரட்டும். நம்ம கட்சி கூட்டத்துக்கு மக்கள் வர மாட்டார்கள் என்று நினைத்த பாஜகவினர், எய்ம்ஸ் விழாவையே கட்சி விழா நடக்கும் மேடை அருகிலேயே நடத்த பக்கா பிளான் போட்டு வெற்றி பெற்று விட்டனர். 27-ந் தேதி காலை 11.30 மணிக்கு மதுரை விமான நிலையம் வருகிறார் பிரதமர் . அருகில்தான் விழா மேடை 11.50 முதல் 12 மணி அரசு விழா. 12.05 முதல் 1 மணி வரை கட்சி நிகழ்ச்சி பிரதமரின் பயணத் திட்டம். எய்ம்ஸ் விழாவுக்கு திரளும் அல்லது அதிமுகவினரால் திரட்டப்படும் கூட்டத்தை மோடியின் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்திற்கும் வந்தது போல் காட்டி விடலாம் என்ற சந்தோசத்தில் குதிக்கிறார்கள் பாஜகவினர் .

மோடியின் மதுரை நிகழ்ச்சிக்கான தடபுடல் ஏற்பாடுகளில் மதுரை மாவட்ட நிர்வாகமும், ஆளும் அதிமுகவினரும் இப்போதே ஜரூராக இருக்க பாஜகவினர் சந்தோசமாக வேடிக்கை பார்க்கின்றனர்.

More News >>