தெகிடி அடுத்து மீண்டும் இணையும் ஜனனி ஐயர் - அசோக் செல்வன்

ஜனனி ஐயர் மற்றும் அசோக் செல்வன் இணைந்து நடிக்கும் ஒரு புதிய படத்திற்கு ஒப்பந்தமாகி உள்ளனர்.

இயக்குனர் பாலாவின் அவன் இவன் படத்தின் மூலம் அறிமுகமானவர் ஜனனி ஐயர். இதன் பிறகு, பாகன், தெகடி உள்ளிட்ட படங்களில் நடித்தார்.இந்நிலையில், விஜய் டிவியின் பிரபல பிக்பாஸ் நிகழ்ச்சியில் இரண்டாம் சீசனில் ஜனனி ஐயர் பங்கேற்று பைனல்ஸ் வரை சென்றார். பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் இவருக்கு நிறைய ரசிகர்கள் கிடைத்தனர்.

பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்து வெளியில் வந்ததும் புதிய படம் இவருக்கு ஒப்பந்தமாகியுள்ளது.

இந்த படத்தை சந்தீப் ஷியாம் இயக்க உள்ளார். மர்மம், கொலை கதையம்சம் கொண்ட இந்த படத்தில் ஜனனி ஐயருக்கு ஜோடியாக அசோக் செல்வன் நடிக்கிறார்.

ஜனனி ஐயரும் - அசோக் செல்வனும் ஏற்கனவே தெகிடி படத்தில் ஒன்றாக நடித்துள்ளனர். இவர்களது ஜோடியில் இது இரண்டாவது படம். இந்த படத்தில் அசோக் செல்வன் இரண்டு கெட்டப்பில் நடிப்பதாகவும், முதல்கட்ட படப்பிடிப்பு முடிந்த நிலையில், அடுத்தகட்ட படப்பிடிப்பு வரும் பிப்ரவரி மாதம் நடைபெறும் எனவும் இயக்குனர் சந்தீப் ஷியாம் தெரிவித்துள்ளார்.

More News >>