நேப்பியர் ஒரு நாள் போட்டியில் நியூசிலாந்து அணியை 157 ரன்களில் சுருட்டியது இந்தியா.
இரு அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரின் முதல் போட்டி நேப்பியரில் இன்று நடக்கிறது.டாஸ் வென்று பேட்டிங் செய்த நியூசி அணிக்கு ஆரம்பத்திலேயே வேகத்தில் அடி கொடுத்தார் முகமது சமி . தொடக்க ஆட்டக்காரர்கள் இருவரையும் அடுத்தடுத்து சமி வீழ்த்தினார். இதனால் இந்தியப் பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் தடுமாறிய நியூசி.அணி 38 ஓவர்களில் 157 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன் மட்டுமே ஒரௗவு தாக்குப் பிடித்து 64 ரன்கள் எடுத்தார். இந்தியத் தரப்பில் குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுகளையும், சமி (3) ,சகால் (2), கேதார்ஜாதவ் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். 158 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் இந்தியா ஆடி வருகிறது.