கரு நிற ஆடையில் ஜனனி ஐயர்.. குவியும் கவிதை மழை..
ஜனனி ஐயர் தனது ட்விட்டர் கணக்கில் வெளியிட்டுள்ள புகைப்படங்களை ரசித்து அவரது ரசிகர்கள் கவிதை மழையை பொழிந்து தள்ளுகின்றனர்.
ஏற்கனவே தமிழ், மலையாளம் படங்களில் நடித்திருந்தாலும் பிக்பாஸ் நிகழச்சிக்கு பிறகு ஜனனி ஐயருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள். ஓவியா ஆர்மி போன்று, ஜனனி ஐயருக்கும் ஆர்மி ஒன்றை தொடங்கிவிட்டனர்.
இந்நிலையில், விஜய் டிவியின் பிரபல நிகழ்ச்சியான சூப்பர் சிங்கரில் பிக்பாஸ் போட்டியாளர்கள் சமீபத்தில் பங்கேற்றனர். அதன் புகைப்படங்கள் ட்விட்டரில் வெளியானது. குறிப்பாக, ஜனனி ஐயர் கருப்புநிற ஆடையில் இருக்கும் புகைப்படங்கள் ரசிகர்களை சுண்டி இழுத்து கவிதை மழையை பொழிய வைத்துள்ளது.
அந்த கவிதை மழையில் சிறு துளிகள் இதோ..
நீ கண் மை தீட்டியதில்.. நிறைய கவிதை விழுகிறது.. பொரு எடுத்து கொள்கிறேன்..
வானவில்லை மேகத்தில் பார்த்து இருக்கேன்.. இன்று இமைகள் மூடாமல் கண்டு ரசித்து கொண்டு இருக்கிறேன் சுடிதாரில் உள்ள வானவில்லை..
எண்ண நினைத்தாலும் எண்ணமுடியாத உன் கருங்கூந்தல் அழகு..!நொடி பொழுதில் என்னை விழுங்கும் உன் கண்கள் அழகு..!உன்னை நினைத்து நான் எழுதும் கவிதை அழகு..!
வண்ண நிலவும் - உன்னை வட்டமிட்டு சிறைபிடிக்குமடி.. உன் அழகை மறைத்து வைக்க..
அடடே.. கவித.. கவித..