விடாத அரியாசன மோகம்... ஆடிட்டர் குருமூர்த்தியிடம் கெஞ்சும் ஓபிஎஸ் தரப்பு
சென்னை ராதாகிருஷ்ணன் சாலையில் அமைந்துள்ள ஆடிட்டர் குருமூர்த்தியின் அலுவலகத்தில் ஓபிஎஸ் தரப்பினரின் முகம் அடிக்கடி தென்படுகிறதாம். நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னதாக மீண்டும் அரியாசனம் ஏறத் துடிக்கிறாராம் ஓபிஎஸ்.இதற்காக, தர்மயுத்தத்துக்கு ஸ்கிரிப்ட் எழுதிக் கொடுத்த ஆடிட்டரை சந்தித்துப் பேசுகிறார்களாம். இந்தச் சந்திப்பில், நீங்கள் என்ன டிமாண்ட் வைத்தாலும் நிறைவேற்றிக் கொடுக்கிறோம். கொங்கு கேபினட் ஆட்சியில் நீடிக்கக் கூடாது. அவர்கள் மீதான வழக்குகளை வேகப்படுத்துங்கள். மோடிக்கு எதிராக தம்பிதுரையை தூண்டிவிடுவதே அந்த கேபினட்தான்.
ஜெயலலிதாவைவிட வளர்ந்துவிட்டதாக நினைக்கிறார் ஈபிஎஸ். அதனால்தான் வாய்க்கு வந்தபடியெல்லாம் பேசுகிறார்கள். ஏற்றிவிட்ட ஏணியை எட்டி உதைக்கிறார்கள்.
நாங்கள் அன்று முதல் இன்று வரையில் ஒரே மாதிரியாகத்தான் இருக்கிறோம். கொங்கு கேபினட் வளர்ந்துவிட்டால், அவர்களை அசைப்பது கடினம். நீங்கள்தான் மேலிடத்தில் எடுத்துச் சொல்ல வேண்டும்' எனக் கெஞ்சுகிறார்களாம்.
ஆடிட்டரும், எல்லாம் நல்லபடியாக நடக்கும் எனச் சொல்லி அனுப்பியிருக்கிறாராம்.