அமைச்சர் பதவி தராவிட்டால் கர்நாடகா நிலைதான் ..... ம.பி.முதல்வருக்கு பகுஜன் எம்எல்ஏ மிரட்டல்!
அமைச்சர் பதவி தராவிட்டால் கர்நாடகா நிலை ஏற்படும் என்று ம.பி.முதல்வர் கமல்நாத்துக்கு மாயாவதி கட்சி பெண் எம்எல்ஏ பகிரங்கமாக மிரட்டல் விடுத்துள்ளார்.
ம.பி. சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தம் உள்ள 230 தொகுதிகளில் காங்கிரஸ் 114-ல் வென்றது. பாஜக 109-ல் வென்றது. பெரும்பான்மை இல்லாத நிலையில் 2 சுயேட்சைகள், இரு பகுஜன் எம்எல்ஏக்கள், சமாஜ்வாதியின் ஒரு எம்எல்ஏ ஆதரவுடன் காங். ஆட்சி அமைத்து கமல்நாத் முதல்வரானார். ஆதரவு தந்த பகுஜன் மற்றும் சமாஜ்வாதி கட்சி எம்எல்ஏக்களுக்கு அமைச்சர் பதவி தருவதாக வாக்குறுதியாம்.
ஆனால் நாட்கள் பல கடந்தும் அமைச்சர் பதவி தராததால் பகுஜன் ஆட்சி பெண் எம்எல்ஏ ராம்பாய்சிங் ஆவேசமாகி, அமைச்சர் பதவி தராவிட்டால் கர்நாடகா நிலைதான் இங்கும் ஏற்படும் என மிரட்டல் விடுத்துள்ளார். இதே பெண் எம்எல்ஏ தான் சில தினங்களுக்கு முன், அமைச்சர் பதவி தருவதாக கூறிய வாக்குறுதியை நீங்கள் மறந்தால், ஆதரவு தருவதாக கூறிய எங்கள் வாக்குறுதியையும் மறந்து விடுவோம் என எச்சரித்திருந்தார். பகுஜன் கட்சி போல் சமாஜ்வாதியும் ம.பி. காங்கிரஸ் முதல்வர் கமல்நாத் மீது கோபத்தில் உள்ளது.