அரசியல் களத்தில் குதித்தார் பிரியங்கா - உ.பி.மாநில பொதுச் செயலாளராக நியமனம்!

உ.பி.மாநிலத்தின் கிழக்குப் பகுதிக்கு பிரியங்காகாந்தியை தலைவராக நியமித்துள்ளார் ராகுல் காந்தி.லோக்சபா தேர்தல் நெருங்குவதால் தேர்தல் பணிகளில் மும்முரமாகி விட்டார் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி. பிரதமர் பதவியை குறிவைத்து காய் நகர்த்தும் ராகுலை உ.பி.யில் மாயாவதியும், அகிலேசும் கூட்டணியில் சேர்க்காமல் டாட்டா காட்டி விட்டனர். ஆனாலும் 3 மாநில தேர்தல் வெற்றி தந்த உற்சாகத்தில் உ.பி.யிலும் தனித்து நின்று கணிசமான தொகுதிகளை கைப்பற்றி விடலாம் என்ற நம்பிக்கை ராகுலுக்கு உள்ளது. இதற்கு பிரியங்காவையும் களத்தில் இறக்கினால் வெற்றி நிச்சயம் என்ற யோசனையும் உதிக்க அவருக்கு கட்சியில் முதல் தடவையாக பதவி வழங்கியுள்ளார் ராகுல் .

உ.பி.மாநிலத்தை கிழக்குப் பகுதி, மேற்குப் பகுதி எனப் பிரித்து கிழக்குப் ப குதிக்கு தலைவராக பிரியங்காவை நியமனமும் செய்துள்ளார் ராகுல் . இதற்கு முன் காங்கிரஸ் கட்சியில் எந்தப் பதவியும் வகித்ததில்லை என்ற போதிலும் தேர்தல் நேரத்தில் தனது தாய் சோனியாவின் ரேபரேலி , சகோதரர் ராகுலின் அமேதி தொகுதிகளில் தீவிர பிரச்சாரம் செய்த அனுபவம் பிரியங்காவுக்கு உண்டு. பிரியங்காவும் அரசியல் களத்தில் குதித்துள்ளது காங்கிரசாருக்கு பெரும் உற்சாகத்தை தந்துள்ளது.

More News >>