விலையில்லா சைக்கிள்கள்! நொந்து போன கோவை பெற்றோர்கள்!

கோவை ரயில் நிலையம் அருகில் இயங்கி வருகிறது அரசு உதவி பெறும் பள்ளி ஒன்று. இந்தப் பள்ளியில் பயிலும் மாணவிகளுக்கு நேற்று தமிழக அரசின் இலவச சைக்கிள் வழங்கப்பட்டது.இந்த சைக்கிள்களில் முறையாக காற்று அடிக்கப்படவில்லை. இதனால் விலையில்லா சைக்கிள்களைத் தள்ளியபடியே அருகில் இருந்த சைக்கிள் கடைகளில் காற்று ஏற்றிக் கொண்டனர்.

பல சைக்கிள்கள் பஞ்சராக இருந்ததால் நொந்து போய்விட்டனர். ஏராளமான சைக்கிள்கள் வந்ததால், கடைக்காரர் திருப்பி அனுப்பிவிட்டார்.இதனால் ஆட்டோவில் சைக்கிள்களை ஏற்றிச் செல்லும் அவலநிலை ஏற்பட்டது. இலவச சைக்கிள்களை கொடுப்பதற்கு முன்னால் அதன் தற்போதைய நிலை குறித்து அதிகாரிகள் ஆராய மாட்டார்களா என வேதனைப்படுகின்றனர் பெற்றோர்கள்.

More News >>