நேப்பியர் ஒரு நாள் போட்டி - இந்தியா அபார வெற்றி!

நேப்பியரில் நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது.

5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரின் முதல் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்தது நியூசிலாந்து . இந்திய வீரர்களின் அபார பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் 38 ஓவர்களில் 157 ரன்களுக்கு ஆல் அவுட்டானது நியூசிலாந்து . அந்த அணியின் கேப்டன் வில்லியம்சன் மட்டுமே அதிகபட்சமாக 64 ரன்கள் எடுத்தார். இந்தியத் தரப்பில் குல்தீப் யாதவ் (4) சமி (3) சகால் (2) விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

பின்னர்158 ரன்கள் என்ற எளிய இலக்குடன் ஆடிய இந்திய அணியில் ரோகித் சர்மா 11 ரன்களில் அவுட்டானார். தவானுடன் ஜோடி சேர்ந்த கேப்டன் கோஹ்லி சிறப்பாக விளையாடி 45 ரன்கள் எடுத்தார். ஆட்டத்தின் 11-வது ஓவரில் சூரிய ஒளியின் தாக்கத்தால் ஆட்டம் அரை மணி நேரம் பாதிக்கப்பட்டு போட்டி 49 ஓவராக குறைக்கப்பட்டு மீண்டும் தொடர்ந்தது. 34.5 ஓவரில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது. தவான் (75), ராயுடு (13) ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். ஆட்ட நாயகனாக வேகத்தில் மிரட்டிய முகமது சமி தேர்வு செய்யப்பட்டார்.

More News >>