பத்திரிகையாளர் மேத்யூ சாமுவேல் மீது ரூ.1.10 கோடி நஷ்ட ஈடு கேட்டு முதல்வர் வழக்கு

கொடநாடு கொலை விவகாரத்தில் தெகல்கா முன்னாள் ஆசிரியர் மேத்யூ சாமுவேல் மீது முதல்வர் எடப்பாடி பழனிசாமி ரூ.1.10 கோடி நஷ்ட ஈடு கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

கொடநாடு கொலை, கொள்ளை விவகாரத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு தொடர்பு இருப்பதாக கூறி தெகல்கா பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் மேத்யூ சாமுவேல் வீடியோ ஒன்றை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.

இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி வீடியோ தொடர்பாக சயான் மற்றும் மனோஜ் மீது சென்னை காவல்துறையிடம் புகார் தெரிவித்தார்.

இந்நிலையில், கொடநாடு விவகாரத்தில் தன் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் மேத்யூ நடந்து கொள்கிறார் என்றும், இதனால் நஷ்டஈடாக ரூ.1.10 கோடி வழங்க உத்தரவிடவேண்டும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் மானநஷ்ட வழக்கு தொடர்ந்துள்ளார்.

இந்த மனு மீதான விசாரணை நாளை நடைபெறும் என நீதிபதி அறிவித்துள்ளார்.

More News >>