வாங்க மச்சான் வாங்க.. கெத்ரின்.. சிம்பு.. மேகா போடும் குத்தாட்டம்

வந்தா ராஜாவாதான் வருவேன் படத்தோட இரண்டாவது சிங்கிள் டிராக் ரிலீசாகி பட்டயகிளப்பி வருகிறது.

சுந்தர்.சி இயக்கத்தில் சிம்பு, மேகா ஆகாஷ், கேத்ரின் தெரசா, பிரபு, ரம்யா கிருஷ்ணன், நாசர், யோகிபாபு, ரோபோ ஷங்கர், மொட்டை ராஜேந்தர் என நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள படம் வந்தா ராஜாவாதான் வருவேன்.

இந்த படம் பொங்களை முன்னிட்டு, பேட்ட மற்றும் விஸ்வாசத்திற்கு போட்டியாக ரிலீஸ் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சில காரணங்களால் வந்தா ராஜாவாகதான் வருவேன் வரும் பிப்ரவரி மாதம் 1ம் தேதி ரிலீஸ் செய்யப்படுகிறது.

லைகா தயாரிக்கும் இந்த படத்திற்கு ஹிப் ஹாப் ஆதி இசையமைத்துள்ளார். ஏற்கனவே படத்தின் டீசர் மற்றும் ரெட் கார்டு என்ற முதல் சிங்கிள் டிராக் பாடல் கடந்த 6 நாட்களுக்கு முன்பு ரிலீஸ் ஆனது.

இந்நிலையில், இன்று மாலை 5 மணிக்கு வாங்க மச்சான் வாங்க என்ற இரண்டாவது சிங்கிள் டிராக் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. இந்த பாடலில், சிம்புவின் இடது பக்கத்தில் மேகா ஆகாஷ¨ம், வலது பக்கத்தில் கெத்ரின் தெரேசாவும் குத்தாட்டம் போட்டுள்ளனர். இந்த பாடல் எம்ஜிஆர் நடித்த மதுரை வீரன் படத்தில் இடம்பெற்றுள்ள வாங்க மச்சான் வாங்க வந்த வழிய பாத்து போங்க.. பாடலின் ரீமிக்ஸ். தற்போதுள்ள டிரெண்டிற்கேற்ப மாற்றியுள்ளார் இசையமைப்பாளர் ஹிப் ஹாப் தமிழா.

More News >>