ஆண்டின் சிறந்த வீரராக இந்திய கேப்டன் விராட் கோலி தேர்வு!
2016 - 17 ஆண்டுக்கான சிறந்த கிரிக்கெட் வீரர் விருதை இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பெற்றுள்ளார். மேலும் சிறந்த ஒரு நாள் கிரிக்கெட் வீரர் என்ற விருதையும் கோலி பெற்றுள்ளார்.
செப்டம்பர் 21, 2016 முதல் 2017 இறுதி வரை வீரர்களின் ஆட்டம் கணக்கெடுக்கபப்ட்டது. இதில் விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட்டில் 2,203 ரன்களை குவித்துள்ளார். ஒரு நாள் போட்டிகளில் 1,818 ரன்களை குவித்துள்ளார்.
ஆஸ்திரேலிய அணித் தலைவர் ஸ்டீவ் ஸ்மித், சிறந்த டெஸ்ட் கிரிக்கெட் வீரராக தேர்ந்தெடுக்கப்பட்டார். செப்டம்பர் 21, 2016 முதல் 2017 இறுதி வரையான காலகட்டத்தில் அவர் 1876 ரன்களை 16 டெஸ்ட் போட்டிகளில் குவித்துள்ளார். இதில் 8 சதங்களும், 5 அரை சதங்களும் அடங்கும்.
ஐசிசி-ன் டெஸ்ட் அணி:
டீன் எல்கர், டேவிட் வார்னர், விராட் கோலி (கேப்டன்), ஸ்டீவன் ஸ்மித், புஜாரா, பென் ஸ்டோக்ஸ், டி காக் (விக்கெட்கீப்பர்), அஸ்வின், ஸ்டார்க், ரபாடா, ஜேம்ஸ் ஆண்டர்சன்
ஐசிசி-ன் ஒருநாள் அணி:
டேவிட் வார்னர், ரோஹித் சர்மா, விராட் கோலி (கேப்டன்), பாப்ர் அசாம், டிவில்லியர்ஸ், டி காக் (விக்கெட் கீப்பர்), பென் ஸ்டோக்ஸ், ட்ரெண்ட் போல்ட், ஹசன் அலி, ரஷித் கான், பும்ரா