25-ந்தேதிக்குள் பணிக்கு திரும்ப வேண்டும் - அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு நீதிமன்றம் உத்தரவு!
வரும் 25-ந் தேதிக்குள் பணிக்குத் திரும்ப வேண்டும் என காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது .
பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். சம விகித ஊதியம் என்பது உள்ளிட்ட 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர், ஆசிரியர்களின் கூட்டமைப்பான ஜாக் டோ ஜியோ சார்பில் காலவரையற்ற வேலை நிறுத்தம் நேற்று முதல் நடைபெறுகிறது. ஆசிரியர்களின் போராட்டத்தால் மாணவர்களின் படிப்பு பாதிக்கப்படுகிறது.
எனவே போராட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என கோகுல் என்ற மாணவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கை அவசர வழக்காக உயர்நீதிமன்ற நீதிபதிகள் சத்யநாராயணா, ராஜமாணிக்கம் அமர்வு விசாரித்தது. அப்போது, போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வர அரசு என்ன நடவடிக்கை மேற்கொண்டது என்பது உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை தமிழக அரசு வழக்கறிஞரிடம் நீதிபதிகள் சரமாரியாக எழுப்பினர். பின்னர் வேலை நிறுத்தத்தை கைவிட்டு 25-ந் தேதிக்குள் பணிக்குத் திரும்ப வேண்டும் என ஜாக்டோ ஜியோ அமைப்புக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.