10% இடஒதுக்கீட்டுடன் ரயில்வேயில் 2.5 லட்சம் வேலை - மத்திய அரசு அறிவிப்பு!
பொருளாதாரத்தில் பின்தங்கிய வகுப்பினருக்கு 10% இட ஒதுக்கீட்டுடன் ரயில்வேயில் 2.5 லட்சம் புதிய வேலை வாய்ப்புகளை மத்திய அரசு அறிவித்துள்ளது.
பொருளாதாரத்தில் பின்தங்கிய வகுப்பிணருக்கு கல்வி, வேலை வாய்ப்பில் 10% இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத் திருத்த மசோதாவை மத்திய அரசு சமீபத்தில் அவசர அவசரமாக நிறைவேற்றியது. பொதுத் தேர்தல் நெருங்கும் நேரத்தில் தேர்தல் ஆதாயத்திற்காக இந்த இட ஒதுக்கீடு என எதிர்க்கட்சிகள் விமர்சித்தாலும் வேறு வழியின்றி பெரும்பாலான கட்சிகள் ஆதரித்தன. இந்நிலையில் இந்த இட ஒதுக்கீடு சலுகையை பொருளாதாரத்தில் பின்தங்கிய வகுப்பினர் உடனடியாக பெறும் பொருட்டு ரயில்வேயில் 2.5 லட்சம் புதிய வேலை வாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பு வரும் பிப்ரவரி முதல் வாரத்தில் வெலியாகும் என மத்திய ரயில்வே அமைச்சர் பியூஸ் ேகாயல் அறிவித்துள்ளார்.