மறைந்த பாடலூர் விஜய் குடும்பத்திற்கு மு.க.ஸ்டாலின் நேரில் ஆறுதல் - ரூ10 லட்சம் நிதியுதவி!
மறைந்த திமுக தொண்டர் பாடலூர் விஜய் குடும்பத்தினருக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆறுதல் தெரிவித்து ரூ.10 லட்சம் நிதியுதவி உதவி வழங்கினார்.
தசைச் சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட நிலையிலும் திமுக கொள்கைகளை முகநூல் மூலம் பரப்பி வந்தவர் பாடலூர் விஜய். நுரையீரல், சுவாசக்கோளாறு காரணமாக கடந்த 15-ந் தேதி விஜய் மரணமடைந்தார். அவருடைய மறைவுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உருக்கமாக இரங்கல் தெரிவித்திருந்தார். இந்நிலையில் இன்று பாடலூரில் உள்ள விஜய்யின் இல்லத்திற்கு ஸ்டாலின் நேரில் சென்று விஜய்யின் திருவுருவப் படத்தை திறந்து வைத்து குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார். மேலும் ரூ.10 லட்சம் நிதியுதவியும் வழங்கினார். விஜய் மறைந்தாலும் எங்கள் நெஞ்சங்களில் என் கம் நீங்கா இடம் பெற்றுள்ளார் என அவரது குடும்பத்தினருக்கு மு.க.ஸ்டாலின் உருக்கமாக ஆறுதல் தெரிவித்தார்.