பிரியங்காவுக்கு ரேபரேலி ரெடி - அரசியலுக்கு சோனியா முழுக்கு!
பிரியங்காவுக்காக ரேபரேலி தொகுதியை விட்டுத் தருகிறார் சோனியா. உடல் நிலையைக் காரணம் காட்டி அரசியலில் இருந்தும் ஒதுங்க சோனியா முடிவு செய்து விட்டாராம்.
பிரியங்காவின் அரசியல் பிரவேசம் காங்கிரசுக்கு உற்சாகத்தை கொடுத்துள்ளது. இந்நிலையில் மக்களவைத் தேர்தலிலும் பிரியங்கா போட்டியிட தயாராகி விட்டார். ரேபரேலி தொகுதியை பிரியங்காவுக்கு விட்டுத் தர சோனியாவும் சம்மதித்துவிட்டாராம்.
அத்துடன் அரசியலில் இருந்தும் ஓய்வு பெற சோனியா முடிவெடுத்துவிட்டாராம். ஆனால் சுல்தான்பூர் தொகுதி மீதும் பிரியங்காவுக்கு பிரியமாம். ரேபரேலி அல்லது சுல்தான்பூர் தொகுதிகளில் எங்கு விருப்பமோ அங்கேயே போட்டியிடட்டும் என பிரியங்காவின் முடிவுக்கே விட்டு விட்டாராம் ராகுல் காந்தி.