ஆப்பிரிக்காவில் அதிர்ச்சி சம்பவம்: இறந்த பெண்ணுக்கு குழந்தை பிறந்த அதிசயம்
ஆப்பிரிக்காக: பிணவறையில் சடலமாக வைக்கப்பட்டிருந்த பெண்ணுக்கு திடீரென குழந்தை பிறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
தென் ஆப்பிரிக்கா, தாம்போ என்ற மாவட்டத்தில் தயிஸி என்னுமு குக்கிராமம் உள்ளது. இந்த கிராமத்தை சேர்ந்த நிறைமாத கர்ப்பிணி பெண் டோயிக்கு(33) கடந்த பத்து நாட்களுக்கு முன்பு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதனால், அவர் வீட்டிலேயே இறந்துப்போனார். போயிக்கு ஏற்கனவே ஐந்து குழந்தைகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
நிறைமாத கர்ப்பிணி இறந்துப்போனது அக்கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
இந்நிலையில், போயியின் இறுதி சடங்கிற்கு பிறகு, சடலத்தை அடக்கம் செய்வோரிடம் ஒப்படைக்கப்பட்டது. இதன்பின்னர், போயியின் சடலம் பிணவறையில் வைக்கப்பட்டது. அனைத்து சடங்குகளும் முடிந்த பின்னர், புதைப்பதற்காக சடலத்தை பிணவறை ஊழியர்கள் வெளியே எடுத்தனர். அப்போது, டோயியின் கால்களுக்கு இடையே பச்சிளம் குழந்தை இறந்தநிலையில் கிடந்தது. இதைக் கண்டு, பிணவறை ஊழியர்கள் அதிர்ச்சியடைந்தனர். மேலும், இறந்த பெண் எப்படி பிரசவித்திருக்க முடியும் என்று குழப்பத்தில் ஆழ்ந்தனர்.
இதுகுறித்து உடனடியாக டோயியின் கிராமத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதிர்ந்துபோன கிராம மக்கள் இறந்த பெண்ணுக்கு எப்படி குழந்தை பிறக்கும் என்றும் இது கண்டிப்பாக அமானுஷ்யத்தின் வேலை தான் என்றும் கூறினர்.இதுகுறித்து டோயியின் தாய் கூறுகையில், “காரணமே இல்லாமல் என் மகள் இறந்துப்போனாள். இறந்த பிறகு குழந்தை பிறந்துள்ளது. இந்த இரண்டு சம்பவமும் தீயசக்தியின் வேலை தான். அதனால் இரண்டு சடலத்தையும் எரித்துவிடுங்கள்” என்று கூறி கதறி அழுதார்.
இதற்கிடையே இந்த சம்பவம் குறித்து டாக்டர்கள் கூறுகையில், “ஆப்பரிக்காவில் இதுவரை இதுபோன்ற சம்பவம் நிகழ்ந்ததே இல்லை. நாங்கள் கேள்விபட்டதும் இல்லை. இறந்த உடலில் நுண்ணியிரிகளின் செயல்பாட்டால் குழந்தை பிறந்திருக்கலாம். அல்லது இறந்த பின்பு நடக்கும் தசை தளர்வால் குழந்தை வெளியே தள்ளப்பட்டிருக்கலாம். ஆனால், இது இயற்கையான ஒன்றுதான். அமானுஷ்யம் என்று எதுவுமில்லை” என்று தெளிவுப்படுத்தினர்.
பின்னர், டோயியின் சடலம், குழந்தையின் சடலத்துடன் சேர்த்து சவப்பெட்டிக்குள் வைத்து புகைக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்த செய்தி, அந்நாட்டு ஊடகம் ஒன்றி வெளியிட்டது.