நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகும் தொடரும் ஜாக்டோ ஜியோ போராட்டம் !
உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும் அரசு ஊழியர்,ஆசிரியர்கள் பணிக்குத் திரும்பவில்லை.
தமிழகம் முழுவதும் மாவட்டத் தலை ஆர்ப்பாட்டம், மறியலில் ஈடுபட்ட பல ஆயிரம் அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ அமைப்பினரின் காலவரையற்ற வேலை நிறுத்தம் மூன்றாவது நாளாக இன்றும் தொடர்கிறது . இதனால் ஆசிரியர்கள் வராததால் அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர். அரசு அலுவலகங்களிலும் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. வேலை நிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் 25-ந் தேதிக்குள் பணிக்குத் திரும்ப வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டும் இன்றும் போராட்டம் தீவிரமாகி யுள்ளது. தமிழகம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் மறியல், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பல ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டனர். மதுரையில் மறியலில் ஈடுபட்டவர்களில் சுமார் 3 ஆயிரம் பேரை மட்டும் கைது செய்து 50 அரசுப் பேருந்துகளில் ஏற்றிச் சென்றனர். அனைவரையும் கைது செய்து ஏற்றிச் செல்ல போதிய பேருந்துகள் இல்லாததால் மறியல் நீடித்தது.
இந்தப் போராட்டத்திற்கு தலைமைச் செயலக ஊழியர் சங்கமும் ஆதரவு தெரிவித்துள்ளது.தலைமைச் செயலக ஊழியர்கள் இன்று ஆர்ப்பாட்டம் மட்டும் செய்தனர். கோரிக்கைகளை அரசு நிறைவேற்றாவிட்டால் வேலை நிறுத்தத்தில் தாங்களும் பங்கு கொள்வோம் என்று அறிவித்துள்ளனர். இதற்கிடையே பணிக்குத் திரும்ப வேண்டும் என்ற உயர் நீதிமன்ற உத்தரவு குறித்து 2 சாதிக்கஜாக்டோ ஜியோ அமைப்பின் உயர்மட்டக் குழுக் கூட்டம் சென்னையில் இன்று நடைபெறுகிறது. இதில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று தெரிகிறது.