ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி மறுப்பது ஏன்?- தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்!

ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க தடையேதும் இல்லை என்ற தீர்ப்பு வழங்கிய பிறகும் தமிழக அரசு அனுமதி வழங்காதது ஏன்? என உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

உடனடியாக மின் இணைப்பு வழங்க வேண்டும் எனவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க தமிழக அரசு அனுமதி தரவில்லை. மின் இணைப்பு வழங்குவது குறித்தும் இருமுறை கடிதம் எழுதியும் தமிழக அரசு பதில் அளிக்கவில்லை.

இதனால் ஆலையைத் திறக்க நடவடிக்கை எடுக்கக்கோரி வேதாந்தா குழுமம் உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் வழக்குத் தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், தேசிய பசுமைத் தீர்ப்பாயம் அனுமதி அளித்தும் தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க அனுமதி மறுப்பது ஏன் என்று கண்டனம் தெரிவித்தனர்.

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க சில நிபந்தனைகளுடன் உச்ச நீதிமன்றமே ஆணையிட நேரிடும் என்றும் தலைமை நீதிபதி எச்சரித்தார். மேலும் உடனடியாக ஸ்டெர்லைட் ஆலைக்கு மின் இணைப்பு வழங்கவும் உத்தரவிட்டு பிற்பகலுக்கு விசாரணையை ஒத்தி வைத்தார். இதனால் ஸ்டெர்லைட் ஆலை விவகாரம் தமிழகத்தில் மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

More News >>