குக்கர் சின்னம் கிடைக்கும்.. தினகரன் நம்பிக்கை!
குக்கர் சின்னம் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவை தினகரன் இன்று சந்தித்தார். அதன்பின் செய்தியாளர்களிடம் கூறுகையில், குக்கர் சின்னம் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. கட்சியை பதிவு செய்யாததால் குக்கர் சின்னம் ஒதுக்க முடியாது என்று தேர்தல் ஆணையம் காரணம் சொல்கிறது.
ஆனால் நீதிமன்றம் எங்களுக்கே குக்கர் சின்னத்தை ஒதுக்கும் என்ற நம்பிக்கை இன்னமும் உள்ளது என்றார் தினகரன். தமிழகத்திற்கு தாமிர ஆலை தேவையில்லை என்ற சட்டத்தை தமிழக அரசு கொண்டு வர வேண்டும் என்றும் தினகரன் தெரிவித்தார்.