மிகுந்த எதிர்பார்ப்புடன்.. மெஹந்தி சர்க்கஸ் டிரைலர் ரிலீஸ்

இயக்குனர் ராஜூ முருகன் எழுத்தில் விரைவில் வெளிவர இருக்கும் மெஹந்தி சர்க்கஸ் பட டிரைலர் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது.

குக்கூ, ஜோக்கர் என வெற்றிப்படங்களை இயக்கிய ராஜூ முருகன் அடுத்ததாக மெஹந்தி சர்கஸ் என்ற படத்தை எழுதியுள்ளார். இந்த படத்தை சரவண ராஜேந்திரன் இயக்கி உள்ளார்.

மெஹந்தி சர்கஸ் படத்தில் அறிமுக நாயகனாக மாதம்பட்டி ரங்கராஜ் மற்றும் ஸ்வேதா திரிபாதி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இவர்களை தவிர, ஆர்.ஜே.விக்னேஷ், வேலா ராமமூர்த்தி ஆகியோர் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளனர். ஸ்டூயோ கிரீன் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார்.

மெஹந்தி சர்கஸ் படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், கடந்த 6ம் தேதி படத்தின் டீசரை நடிகர் கார்த்தி வெளியிட்டார். படத்தின் பாடல்களும் சமீபத்தில் வெளியானது.

இந்நிலையில், மெஹந்தி சர்க்கஸ் படத்தின் டிரைலர் இன்று ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது.

More News >>