எஸ்.ஜே.சூர்யாவுடன் ஜோடிபோடும் ldquoமேயாத மான்rdquo ஹீரோயின்
எஸ்.ஜே.சூர்யா ஹீரோவாக நடிக்கும் படத்தில் ஹீரோயினாக “மேயாத மான்” ஹீரோயின் பிரியா பவானி சங்கர் ஒப்பந்தமாகி உள்ளார்.
ஒரு நாள் கூத்து படத்தை இயக்கிய நெல்சன் வெங்கடேசன் அடுத்ததாக இயக்கும் படம் ஒன்றில் எஸ்.ஜே.சூர்யா ஹீரோவாக நடிக்கிறார். இந்த படத்தை பொட்டென்ஷியல் ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு, எஸ்.ஆர்.பிரபு ஆகியோர் தயாரிக்கின்றனர். இந்தப் படத்தில் எஸ்.ஜே.சூர்யா ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடிக்கிறார்.
தற்போது, கார்த்தியின் கடைக்குட்டி சிங்கம் படத்தில் கமிட்டாகியுள்ள பவானி சங்கர், அடுத்ததாக இந்தப் படத்தில் நடிக்கவுள்ளார்.