விக்ராந்த் நடிப்பில் சுட்டு பிடிக்க உத்தரவு டிரைலர் இன்று வெளியீடு
நடிகர் விக்ராந்த் நடிப்பில் சுட்டு பிடிக்க உத்தரவு படத்தின் டிரைலர் இன்று ரிலீஸ் செய்யப்படுகிறது.
ராம்பிரகாஷ் ராயப்பா இயக்கத்தில் விக்ராந்த் நடிப்பில் உருவாகி வரும் படம் சுட்டு பிடிக்க உத்தரவு. விக்ராந்த் ஜோடியாக அதுல்யா ரவி நடிக்கிறார்.இவர்களை தவிர, இயக்குனர்களான மிஷ்கின், சுசீந்திரன் ஆகியோரும் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். முழுக்க முழுக்க ஆக்ஷன் படமாக உருவாகியுள்ள இந்த படத்திற்கு ஜேக்ஸ் பெஜோய் இசையமைத்துள்ளார்.
இந்த படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து, பர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் கடந்த ஆண்டு வெளியிடப்பட்டது.
இந்நிலையில், சுட்டு பிடிக்க உத்தரவு படத்தின் டிரைலர் இன்று மாலை 5.30 மணிக்கு ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.