வெனிசூலாவில் அதிபர் யார்? மதுரோவுக்கு ஆதரவாக ராணுவம் ...... கெய்டோவை ஆதரிக்கும் அமெரிக்கா!
வெனிசூலா நாட்டில் அதிபர் மதுரோவுக்கு எதிரான கிளர்ச்சியை அடக்க ராணுவம் களமிறங்கியுள்ளது. தற்காலிக பிரதமராக பிரகடனம் செய்து கொண்ட கெய்டோவுக்கு ஆதரவளிப்பதையும், உள்நாட்டு பிரச்னையில் அமெரிக்கா தலையிடுவதற்கும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
எண்ணெய் வளத்தில் கொழிக்கும் வெனிசூலாவில் சாவேஸ் அதிபராக இருக்கும் போது சர்வ வல்லமை படைத்த கம்யூனிச நாடாக இருந்தது. அமெரிக்க கண்டத்தில் கியூபாவுக்கு அடுத்து வெனிசூலாவும் அமெரிக்காவுக்கு சவாலாகவே திகழ்ந்தது. சாவேஸுக்குப்பின் அதிபராக வந்த நிகோலஸ் மதுராவின் ஆட்சியில் பல்வேறு முறைகேடுகள், ஊழல் குற்றச்சாட்டுகளால் அவருக்கு எதிராக போராட்டங்கள் தீவிரமாகின.கடந்த ஏப்ரலில் பெரும் கிளர்ச்சி ஏற்பட்டு 100-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இதன் பின்னர் சமீபத்தில் நடந்த அதிபர் தேர்தலை எதிர்க்கட்சிகள் புறக்கணித்து விட்டன.
இதனால் மீண்டும் மதுரோ அதிபர் பொறுப்பேற்றார். இதனை ஏற்க மறுத்த எதிர்க்கட்சிகள் முறைப்படி தேர்தல் நடத்த வேண்டும் என கடந்த 4 நாட்களாக கிளர்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் ராணுவத்தில் சிலரும் போராட்டத்தில் இறங்கினர்.இந்நிலையில் மதுரோவுக்கு எதிரியான அந்நாட்டு பாராளுமன்ற சபாநாயகர் தலைநகர் காரகாசில் தன்னைத்தானே புதிய அதிபராக நேற்று முன்தினம் பிரகடனம் செய்தார். அமெரிக்கா, கனடா, சிலி, அர்ஜென்டினா உள்ளிட்ட தென் அமெரிக்க நாடுகள் ஆதரித்தன. ஆனால் மெக்சிகோ, கியூபா எதிர்த்தன.
கெய்டோவை அமெரிக்கா ஆதரித்ததற்கு அதிபர் மதுரோ உடனடியாக எதிர்வினையாற்றி வெனிசூலாவில் உள்ள அமெரிக்க தூதரகத்தை மூடிவிட்டு அதிகாரிகள்,ஊழியர்கள் அனைவரும் வெளியேற கெடு விதித்தார். அத்துடன் கெய்டோவையும் கைது செய்ய ராணுவத்துக்கு உத்தரவிட்டதால் தலை மறைவாகி விட்டார்.. மேலும் தனக்கு எதிரான கிளர்ச்சியை அடக்கவும் ராணுவத்தை ஏவிவிட்டுள்ளார். மதுரோவின் இந்த அதிரடி ராணுவ நடவடிக்கைகளை அமெரிக்கா கண்டித்துள்ளது. மேலும் பல்வேறு வெனிசூலா மீது பல்வேறு தடைகளை விதிக்கப் போவதாகவும் அறிவித்துள்ளது.
இதற்கு ரஷ்யா கடும் கண்டனம் கண்டனம் தெரிவித்துள்ளது. வெனிசூலா நாட்டின் உள்நாட்டு விவகாரத்தில் மூக்கை நுழைத்தால் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க மாட்டோம் என அமெரிக்க அதிபர் டிரம்புக்கு ரஷ்ய அதிபர் புதின் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதனால் வெனிசூலா விவகாரத்தில் ரஷ்யாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே மோதல் அதிகரித்துள்ளது.