பிரதமர் மோடி மதுரை வருகை : 2 மணி நேரம் விமானங்கள் பறக்கத் தடை!
பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு மதுரையில் 2 மணி நேரம் விமானங்கள் பறக்கத் தடை விதிக்கப் பட்டுள்ளது.
எய்ம்ஸ் மருத்துவமனை அடிக்கல் நாட்டு விழா, தேஜஸ்வி ரயில் திட்டம், ராமேஸ்வரம் 4 வழிச்சாலைத் திட்டம் தொடக்க விழாவுக்காக பிரதமர் மோடி நாளை மறுதினம் (27-ந் தேதி) மதுரை வருகிறார். கூடவே பாஜக தேர்தல் பிரச்சாரப் பொதுக் கூட்டத்திலும் மோடி பங்கேற்கிறார். இந்த இரு நிகழ்ச்சிகளும் மதுரை விமான நிலையம் அருகே மண்டேலா நகரில் அருகருகே அமைக்கப்பட்ட மேடைகளில் தனித்தனியே நடைபெறுகிறது.
இந்த விழாவிற்காக நாளை மறுதினம் 11.30 மணிக்கு மோடி மதுரை வருகிறார்.விழா நடைபெறும் இடம் விமான நிலையம் அருகே அமைந்துள்ளதால் 11.30 மணி முதல் 1.30 மணி வரை மதுரை விமான நிலையத்தில் விமானப் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.