ஜாக்டோ ஜியோவுக்கு ஆதரவு தலைமைச் செயலக ஊழியர்களும் திங்கள் முதல் ஸ்டிரைக்!
ஜாக்டோ ஜியோ போராட்டத்திற்கு ஆதரவாக தலைமைச் செயலக ஊழியர் சங்கமும் திங்கட்கிழமை முதல் வேலை நிறுத்தத்தில் குதிக்கிறது.
ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பின் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தை 4-வது நாளாக தொடர்கின்றனர். அரசு எச்சரிக்கை விடுத்த நிலையில் போராட்டத்தை தீவிரப் படுத்தப் போவதாக ஜாக்டோ ஜியோ அறிவித்துள்ளது. தற்போது இந்தப் போராட்டத்தில் தலைமைச் செயலக ஊழியர்களும் திங்கட் கிழமை முதல் பங்கேற்பதாக அறிவித்துள்ளனர்.
இன்று பிற்பகலில் உணவு இடைவேளையின் போது தலைமைச் செயலகத்தில் ஜாக்டோ ஜியோ போராட்டத்திற்கு ஆதரவாக ஊழியர்கள் சிறிது நேரம் முழக்கங்களை எழுப்பி போராட்டம் நடத்தினர் அப்போது திங்கட்கிழமை முதல் தாங்களும் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் பங்கேற்பதாக தலைமைச் செயலக ஊழியர் சங்கத் தலைவர் பீட்டர் அந்தோணிசாமி அறிவித்தார். இதே போன்று காவல் அமைச்சுப் பணியாளர் சங்கத்தினரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.