70-வது குடியரசு தின விழா-சென்னையில் ஆளுநர் பன்வாரிலால் கொடியேற்றினார்!
நாடு முழுவதும் 70-வது குடியரசு தின விழா சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.
சென்னை காமராஜர் சாலையில் ஆளுனர் பன்வாரிலால் புரோகித் தேசியக் கொடியை ஏற்றி வைத்து போலீசாரின் அணி வகுப்பு மரியாதையை ஏற்றார். தொடர்ந்து மாணவர்களின் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. அணிவகுப்பு ஊர்வலத்தில் பல்வேறு அரசுத் துறைகளின் அலங்கார ஊர்திகள் அணிவகுத்துச் சென்றது. விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அமைச்சர்கள் பலரும் பங்கேற்றனர். தலைநகர் டெல்லியில் குடியரசு தினத்தை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. சிறப்பு விருந்தினராக தென்னாப்பிரிக்க அதிபர் சிரில் ராம் போஸா பங்கேற்கிறார். டெல்லி ராஜ்பாத்தில் நடைபெறும் கண்கவர் குடியரசு தின அணிவகுப்பைகுடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி ஆகியோருடன் தெ.ஆப்ரிக்க அதிபர் சிரில் ராம்போசா பார்வையிடுகிறார்.