பிரேசிலில் அணை உடைந்தது: 300 பேர் கதி என்ன?
பிரேசிலில் அணை ஒன்று உடைந்ததில் 300 பேர் கதி என்ன என்பது தெரியவில்லை. இதுவரை 50 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.
பிரேசிலின் புருமடின்ஹோ பகுதியில் இரும்பு தாது வெட்டும் சுரங்கங்கள் உள்ளன. இவை தற்போது பயன்பாட்டில் இல்லை.
இப்பகுதியில் இருந்த அணை திடீரென உடைந்தது. அணையில் இருந்து வெளியேறிய வெள்ள நீர் அருகில் உள்ள பகுதிகளை மூழ்கடித்தது.
இதில் சிக்கிய 300 பேரின் கதி என்ன என்பது தெரியவில்லை. இதுவரை 50 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
அண்மையில் நைரோபியின் சோலை என்ற பகுதியில் இதேபோல் ஒரு அணை உடைந்து பல கிராமங்கள் அப்படியே மூழ்கிப் போகின என்பது குறிப்பிடத்தக்கது.