நியூசி.க்கு எதிரான 2வது ஒருநாள் போட்டி - 324 ரன்கள் குவித்து இந்தியா அபாரம்!
நியூசிலாந்துக்கு எதிரான 2-வது ஒரு நாள் போட்டியில் இந்தியா 4 விக்கெட் இழப்புக்கு 324 ரன்களை விளாசியது.
நியூசிலாந்தின் மவுண்ட் கனுயில் நடைபெறும் 2-வது ஒரு நாள் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் செய்தது. துவக்க ஜோடியான ரோகித் சர்மாவும் ஷிகர் தவானும் அபார விளை யாட்டை வெளிப்படுத்தி நியூசி.பந்து வீச்சை சிதறடித்தனர். முதலாவது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 154 ரன்கள் எடுத்திருந்த போது 66 ரன்களில் ஷிகர் தவான் அவுட்டானார்.தொடர்ந்து 87 ரன்களில் ரோகித்தும் அவுட்டானார். அதன் பின்னரும் இந்தியாவின் ரன் வேட்டையை கோஹ்லி (43) ராயுடு (47) தொடர்ந்தனர்.
கடைசி கட்டத்தில் தோனி நியூசி பந்து வீச்சை சிதறடிக்க 50 ஓவர்களில் இந்தியா 4 விக்கெட் இழப்புக்கு 324 ரன்களை குவித்தது. கடைசி கட்டத்தில் ஆடிய தோனி 33 பந்துகளில் 48 ரன்களும், கேதார் ஜாதவ் 10 பந்துகளில் 22 ரன்களையும் எடுத்து அவுட்டாகாமல் இருந்தனர். நியூசி தரப்பில் பவுல்ட், பெர்குசன் இருவரும் தலா 2 விக்கெட்டுகளை லீழ்த்தினர். 325 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் நியூசிலாந்து ஆடி வருகிறது.