ஜாக்டோ-ஜியோ போராட்டம் : விரைவில் நல்ல அறிவிப்பு வரும் -அமைச்சர் செங்கோட்டையன்!

அரசு ஊழியர்,ஆசிரியர் போராட்டம் குறித்து முதல்வர் பழனிச்சாமியுடன் பள்ளிக் கல்வி அமைச்சர் செங்கோட்டையன் அவசர ஆலோசனை நடத்தினார்.

சென்னை கிரீன்வேஸ் சாலை முதல்வர் இல்லத்தில் அமைச்சர் செங்கோட்டையன், கல்வித்துறை உயர் அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். ஜாக்டோ-ஜியோ போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்தும், அவர்களின் கோரிக்கைகளில் நிறைவேற்றக் கூடியவை பற்றியும் முதல்வருடன் விவாதிக்கப்பட்டதாகத் தெரிகிறது.

முதல்வருடனான ஆலோசனை குறித்து அமைச்சர் செங்கோட்டையனிடம் கேட்டதற்கு, விரைவில் நல்ல அறிவிப்பு வரும் என்று ஒரே வரியில் பதில் சொல்லிவிட்டு கிளம்பினார்.

More News >>