ஜெ.வின் தோழி பதர் சயீத் அதிமுக, ஆம் ஆத்மியை தொடர்ந்து காங்கிரஸில் ஐக்கியம்!
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி பதர் சயீத் திருநாவுக்கரசர் முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.
ஜெயலலிதாவின் பள்ளி தோழி பதர் சயீத் அதிமுக எம்.எல்.ஏ.வாக, வக்பு வாரிய தலைவராக பணியாற்றியவர். பின்னர் ஜெயலலிதா உயிருடன் இருக்கும்போதே ஆம் ஆத்மி கட்சியில் இணைந்தார்.
ஆனால் தீவிர அரசியல் அவருக்கு கை கொடுக்கவில்லை. இதனால் ஒதுங்கியிருந்தார். அதிமுகவில் ஓபிஎஸ் தர்மயுத்தம் தொடங்கிய போது அவருக்கு ஆதரவளித்தார்.
அதிமுகவின் இரு அணிகளும் இணைந்ததைத் தொடர்ந்து மீண்டும் அரசியலில் இருந்து விலகியிருந்தார். இந்நிலையில் பதர்சயீத் இன்று சத்தியமூர்த்தி பவனில் திருநாவுக்கரசர் முன்னிலையில் காங்கிரஸில் இணைந்தார்.