ஸ்டாலினுக்கு உடல்நிலை சரியில்லாததால்தான் அரசியலில் உதயநிதி... ஓபிஎஸ் பகீர் குண்டு

திமுக தலைவர் ஸ்டாலினுக்கு உடல்நிலை சரியில்லாததால்தான் அவரது மகன் உதயநிதியை அரசியல் களமிறக்கியுள்ளார் என்று துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வடசென்னையில் நேற்று நடைபெற்ற மொழிப் போர் தியாகிகள் வீரவணக்க நாள் கூட்டத்தில் ஓ. பன்னீர்செல்வம், எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆட்சியின் சிறப்புகளையும் அவர்கள் வழியில் எடப்பாடி நல்லாட்சி நடத்துவதாகவும் குறிப்பிட்டார்.

மேலும், குறை சொல்ல முடியாத ஆட்சியை நாங்கள் நடத்தி வருகிறோம். இந்த ஆட்சியில் எந்த குறையும் காண முடியாத தினகரன், ஆட்சியைக் கலைத்து விடுவோம் என்கிறார். அது நடக்காது.

ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்பு தொண்டர்கள் இயக்கமாக இருந்த நம் கட்சியை, ஒரு குடும்பத்தினர் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர முயற்சித்தனர். அப்போது நாங்கள் தர்மயுத்தம் நடத்தி தடுத்து நிறுத்தினோம் .

இன்று எடப்பாடி தலைமையில் நல்லாட்சி நடத்திக்கொண்டிருக்கிறோம் . 10 ஆண்டுகாலம் தினகரன் எங்கே இருந்தார்? ஜெயலலிதாவைப் பார்த்தாரா? அல்லது பேசினாரா ?

இல்லை. மருத்துவமனையில் ஜெயலலிதா இருந்த 75 -நாட்களில் , நாங்கள் ஒவ்வொருவரும் கோயில்களில் விசேஷ பூஜைகள் நடத்தினோம் . ஆனால், தினகரன் ஏதாவது செய்திருப்பாரா ? இல்லை.

மக்களிடமும் தொண்டர்களிடமும் அதிமுக அரசுக்குகெட்ட எண்ணத்தை ஏற்படுத்த முயற்சித்துக் கொண்டிருக்கிறார். இன்னும் ஒரு சில நாட்களில் தினகரன் கூடாரம் காலியாகி விடும் . அதன் பிறகு தினகரன் தனி ஆளாகத்தான் இருப்பார்.

ஸ்டாலினும் தினகரனும் கூட்டணி வைத்துக்கொண்டு வேலைகளை செய்கின்றனர். அரசியல் ரீதியாக எதுவும் சொல்ல முடியாதவர்கள் இப்போது முதல்வர் மீது வீண்பழி சொல்கிறார்கள். தந்தை இறந்ததால் தான் ஸ்டாலின் தலைவராக உள்ளார். அவரது உடல்நிலை சரியில்லாததால் அவரது மகனை இப்போது கட்சியில் புகுத்துகிறார் ஸ்டாலின் என்றார்.

- எழில் பிரதீபன்

More News >>