மதுரை வரும் மோடிக்கு கறுப்புக் கொடி- முன்னெச்சரிக்கை கைது நடவடிக்கை மும்முரம் #GoBackModi
மதுரைக்கு நாளை வரும் பிரதமர் மோடிக்கு கறுப்புக் கொடி காட்டுவோம் என அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து அங்கு முன்னெச்சரிக்கையாக கைது செய்யும் நடவடிக்கைகள் நடைபெற்று வருகின்றன.
தமிழக உரிமைகளை பறித்து தமிழர் நலனில் கிஞ்சித்தும் அக்கறை இல்லாமல் இருப்பவர் பிரதமர் மோடி என்பது நீண்டகால குற்றச்சாட்டு. இதனால் மோடி தமிழகம் வர கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்படுகிறது.
அண்மையில் மோடி தமிழகம் வருகை தந்த போது வரலாறு காணாத அளவில் கறுப்புக் கொடி காட்டும் போராட்டம் நடைபெற்றது. சமூக வலைதளங்களில் #GoBackModi சர்வதேச அளவில் டிரெண்டிங் ஆனது.
இந்நிலையில் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார். அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து சில அமைப்புகள் கறுப்பு கொடி காட்டுவோம் என அறிவித்திருந்தன.
இதையடுத்து மதுரை பகுதிகளில் முன்னெச்சரிக்கை கைது நடவடிக்கைகள் நடைபெற்று வருகின்றன. அதிமமுக பொதுச்செயலாளர் வழக்கறிஞர் சே.பசும்பொன்பாண்டியன் மதுரை கரிமேடு போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.