பிரியங்காவின் அரசியல் பிரவேசம்: ராகுலின் முடிவு சரியானதே - அகிலேஷ் யாதவ் பாராட்டு!

பிரியங்காவை தீவிர அரசியலில் ஈடுபடுத்த எடுத்த முடிவு சரியானது என ராகுல்காந்திக்கு சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ்யாதவ் பாராட்டு தெரிவித்துள்ளார்.

இளைஞர்களுக்கு அரசியலில் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பதே சமாஜ்வாதி கட்சியின் நிலைப்பாடு. காங்கிரஸ் கட்சியிலும் பிரியங்காவுக்கு வாய்ப்பு கொடுத்ததற்கு ராகுல் காந்திக்கு பாராட்டுக்கள் என்று அகிலேஷ் புகழ்ந்துள்ளார்.

மேலும் பிரியங்காவின் வருகையால் சமாஜ்வாதி - பகுஜன் கூட்டணிக்கு எந்த பாதிப்பும் இருக்காது. பாஜகவுக்குத்தான் மேலும் சரிவை ஏற்படுத்தும் என்றும் அகிலேஷ் கூறியுள்ளார்.

More News >>