ட்விட்டரில் உலக அளவில் டிரெண்டான #GoBackModi #MaduraiThanksModi #GoBackSadistModi

பிரதமர் மோடியின் மதுரை வருகைக்கு எதிர்ப்பாகவும் ஆதரவும் ட்விட்டரில் பதிவிடப்பட்ட ஹேஷ்டேக்குகள் உலக அளவில் டிரெண்டாகி வருகின்றன.

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டுவதற்கு பிரதமர் மோடி இன்று வருகை தருகிறார். மேலும் பாஜகவின் தேர்தல் பிரசார கூட்டத்திலும் மோடி பங்கேற்கிறார்.

மத்திய பாஜக அரசின் தமிழின துரோகத்தைக் கண்டித்து மோடி வருகைக்கு கறுப்புக் கொடி காட்டப் போவதாக மதிமுக பொதுச்செயலர் வைகோ அறிவித்துள்ளார். இதேபோல் பல அமைப்புகளும் அறிவித்துள்ளன.

இந்த நிலையில் ட்விட்டரில் #GoBackModi #GoBackSadistModi என்ற மோடி எதிர்ப்பு ஹேஷ்டேக்குகள் டிரெண்டாகி வருகின்றன. இதற்கு போட்டியாக #MaduraiThanksModi என்ற ஹேஷ்டேக்கும் டிரெண்டிங்கில் இடம்பெற்றுள்ளன.

மோடி தமிழகம் வந்து திரும்பும் வரை ட்விட்டர் யுத்தம் பரபரப்பாகத்தான் இருக்கப் போகிறது.

More News >>