சசிகலா சிறை வாழ்க்கை வீடியோ வர்த்தகரீதியாக சக்ஸஸ்!

பரப்பன அக்ரஹார சிறையில் சசிகலா தொடர்பான வீடியோ காட்சிகளை தாதாக்கள் தனியார் சேனல்களுக்கு ரூ.10 லட்சத்துககு விற்றிருப்பது தெரிய வந்துள்ளது.

சொத்துக்குவிப்பு மேல்முறை யீட்டு வழக்கில் 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா, கடந்த 5 மாதங்களாக சிறையில் விதிகளை மீறி வி.ஐ.பி வாழ்க்கை வாழ்வதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக கர்நாடக சிறைத்துறை டி.ஐ.ஜி ரூபா அறிக்கை தயாரித்து அனுப்பினார்.

அறிக்கையில் கர்நாடக சிறைத்துறை டி.ஜி.பி சத்யநாராயணராவ் ரூ.2 கோடி வரை லஞ்சம் பெற்றதாக அறிக்கையில் ரூபா குற்றஞ்சாட்டியிருந்தார். அவரின் அறிக்கை கன்னடச் சேனல்களில் வெளியாக, பரபரப்பு நிலவியது. அறிக்கையில் உள்ள விபரங்கள் மீடியாக்களுக்கு போனது ஏன் எனக் கேள்வி எழுப்பி கர்நாடக முதல்வர் சித்தராமையா டி.ஐ.ஜி ரூபாவுக்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தார்.

சசிகலாவின் சொகுசு சிறை வாழ்க்கை சம்பந்தமான புகைப்படங்கள், வீடியோ ஆதாரங்களை தனியார் சேனல்களுக்கு தாதாக்கள் விற்று காசு பாத்திருக்கும் விவரம் தற்போது தெரிய வந்துள்ளது. சசிகலா சம்பந்தப்பட்ட வீடியோ காட்சிகளுக்கு நாடு முழுவதுமே டிமான்ட் அதிகரிக்க, தனியார் சேனல் ஊழியர்கள் தாதாக்கள் வழியாக சசிகலா தொடர்பான வீடியோ காட்சிகளை பெற முயன்றிருக்கின்றனர்.

முதலில் சிறையில் நைட்டி அணிந்தவாறு சசிகலா நடப்பது போன்ற தெளிவாக இல்லாத வீடியோ ரூ. 2 லட்சத்துக்கு தனியார் சேனல் வாங்கியுள்ளது. அடுத்ததாக சசிகலா சுடிதார் அணிந்தவாறு, கையில் ஷாப்பிங் பேக் வைத்துக் கொண்டு சிறைக்குள் வருவது போன்ற வீடியோவை ரூ. 10 லட்சம் கொடுத்து ஆங்கில சேனல் வாங்கி ஒளிபரப்பி டி.ஆர்.பி ரேட்டை உயர்த்தியது. நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய அதிமுக (அம்மா) பொதுச்செயலாளர் சசிகலாவின் சிறை முறைகேடு தொடர்பான வீடியோ, புகைப்பட‌ ஆதாரங்களைஙத் திரட்ட தனியார் சேனல்கள் பணத்தை வாரி இறைத்துள்ளன.

இதற்கிடையே சசிகலாவுக்கு சிறையில் வழங்கப்பட்டுள்ள வசதிகள் உண்மைதான் என கர்நாடக சட்டமன்ற பொதுக் கணக்கு குழு கூட்டத்தில் ஒப்புதல் வாக்குமூலம் அளிக்கப்பட்டுள்ளது.

 

More News >>