மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து மதுரையில் சாலை மறியல் - மதிமுக, மே 17 இயக்கம், த.பெ.க.வினர் கைது!
மோடியின் மதுரை வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியலில் ஈடுபட்ட மதிமுக, தந்தை பெரியார் திராவிடர் கழகம், மே 17 இயக்கத்தினர் கைது செய்யப்பட்டனர்.
மதுரைக்கு வருகை தந்த பிரதமர் மோடிக்கு எதிராக பெரியார் பேருந்து நிலையம் அருகே ஒரு பக்கம் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தலைமையில் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடந்தது. அருகிலேயே தந்தை பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கோவை ராமகிருஷ்ணன், மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி ஆகியோரும் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கருப்புக்கொடி போராட்டத்தின் போது கருப்பு பலூன்களையும் வைகோ பறக்க விட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனை தடுக்க போலீசார் முயன்றதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. தொடர்ந்து மதிமுக, தந்தை பெரியார் திராவிடர் கழகம், மே 17 இயக்கத்தினர் சாலை மறியலிலும் ஈட்ட்டனர்.