ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: 7-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றார் ஜோகோவிச்!
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் சாம்பியன் பட்டத்தை 7-வது முறையாக வென்று சாதனை படைத்தார் ஜோகோவிச் .
மெல்போர்னில் நடந்த இறுதிப் போட்டியில் ஸ்பெயினின் ரபேல் நடாலுடன் செர்பிய வீரர் ஜோகோவிச் மோதினார். விறுவிறுப்பாக நடந்த ஆட்டத்தில் 6- 3, 6-2, 6-3 என்ற கணக்கில் நடாலை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார் ஜோகோவிச் .ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் சாம்பியன் பட்டத்தை ஜோகோவிச் வெல்வது இது 7-வது முறையாகும்.
மேலும் 15 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவர் என்ற சாதனையையும் ஜோகோவிச் படைத்துள்ளார்.