ஹாட்ரிக் வெற்றி பெற்று தொடரை வெல்லுமா இந்தியா - நியூசி.யுடன் நாளை 3-வது ஒரு நாள் போட்டி!
நியூசிலாந்துக்கு எதிரான 3-வது ஒரு நாள் போட்டி நாளை நடக்கிறது.
நாளைய போட்டியில் ஹாட்ரிக் வெற்றி பெற்று தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா களமிறங்குகிறது. இரு அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் முதல் இரு போட்டிகளில் அபார வெற்றி பெற்று 2 -0 என முன்னிலையில் உள்ளது. இந்திய வீரர்கள் பேட்டிங், பந்து வீச்சு இரண்டிலும் அபாரத்திறமையை வெளிப்படுத்தி வருவதால் நாளைய போட்டியிலும் வெற்றி கிட்டும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
உலகக் கோப்பை போட்டிக்கு சில மாதங்களே உள்ள நிலையில் ஆஸி. தொடரைத் தொடர்ந்து நியூசிலாந்து தொடரிலும் இந்திய வீரர்கள் வெற்றி மேல் வெற்றியை குவித்து வருவது குறிப்பிடத்தக்கது.