சர்வம் தாள மையம் படத்தை பார்த்து ஜிவி பிரகாசை பெரிதும் பாராட்டிய பாலா..

வரும் பிப்ரவரி மாதம் 1 தேதி ரிலீஸாகவுள்ள சர்வம் தாளம் மயம் படத்தை பார்த்த இயக்குனர் பாலா ஜிவி பிரகாஷின் நடிப்பை கண்டு வியந்து பெரிதும் பாராட்டினார்.

மின்சார கனவு, கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன் போன்ற சூப்பர் ஹிட் படங்களை கொடுத்த ராஜீவ்மேனன் நீண்ட இடைவெளிக்கு பிறகு தமிழில் ஜிவி பிரகாஷ் நாயகனாக வைத்து ஏ.ஆர். ரஹ்மான் இசையில் சர்வம் தாள மயம் படத்தை இயக்கியுள்ளார்.

இந்த படத்தில் நெடுமுடி வேணு, அபர்ணா பாலமுரளி, வினித், திவ்யதர்ஷினி உள்ளிட்ட பிரபலங்கள் நடித்துள்ளனர் ஜெய்ப்பூர் கேரளா உள்ளிட்ட பல இடங்களில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று முடிந்தது.

படத்தின் ஃபர்ஸ்ட் லுக், டீசர், ட்ரெய்லர், இசை வெளியான நிலையில் இந்த படம் வரும் பிப்ரவரி மாதம் 1ம் தேதி உலக அளவில் ரிலீஸ் செய்யப்படுகிறது இந்த படம் சமீபத்தில் ப்ரீவியூ காட்சியாக திரையிடப்பட்டது. இதனை இயக்குனர் பாலா கண்டு ரசித்தார். அத்துடன் ஜிவி பிரகாஷின் மாறுபட்ட நடிப்பை கண்டு வியந்த பாலா ஜிவி பிரகாஷை பெரிதும் பாராட்டினார்.

பாலாவின் பாராட்டு மழையில் நினைந்த ஜி.வி மகிழ்ச்சியில் உள்ளார்.

More News >>