வேண்டாம் என்றால் உடனே போய்விட வேண்டும் - தற்காலிக ஆசிரியர்களுக்கு கன்டிசனுடன் வேலை!
ஜாக்டோ-ஜியோ வேலை நிறுத்தத்தால் பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர்கள் நாளை முதல் நியமிக்கப்பட உள்ளனர்.
இவர்களின் பணி, ஊதியம் குறித்து விண்ணப்பத்தில் கடுமையான கன்டிசன்கள் உள்ளது. நாளை காலை 9 மணிக்குள் பணியில் சேர வேண்டும். நிதி ஒதுக்கீடு செய்து ஆணை பிறப்பித்த பின் தான் ஊதியம் வழங்கப்படும். தற்காலிக பணிதான என்பதால் வேண்டாம் எனில் எப்போது வேண்டுமானாலும் பணியை விட்டுச்செல்ல வேண்டும். தற்காலிகமாக பணியாற்றியதை காரணம் காட்டி அரசு வேலைக்கு முன்னுரிமை எதுவும் கேட்கக் கூடாது என கடும் நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது.