இன்னும் சற்று நேரத்தில்.. வந்தா ராஜாவாதான் வருவேன் டிரைலர்..
வந்தா ராஜாவாதான் வருவேன் படத்தோட அதிகாரப்பூர்வ டிரைலர் இன்று இரவு 10 மணிக்கு ரிலீஸ் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சுந்தர்.சி இயக்கத்தில் சிம்பு, மேகா ஆகாஷ், கேத்ரின் தெரசா, பிரபு, ரம்யா கிருஷ்ணன், நாசர், யோகிபாபு, ரோபோ ஷங்கர், மொட்டை ராஜேந்தர் என நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள படம் வந்தா ராஜாவாதான் வருவேன்.
இந்த படம் வரும் பிப்ரவரி மாதம் 1ம் தேதி ரிலீஸ் செய்யப்படுகிறது. லைகா தயாரிக்கும் இந்த படத்திற்கு ஹிப் ஹாப் ஆதி இசையமைத்துள்ளார். ஏற்கனவே படத்தின் டீசர், பாடல்கள் ரிலீசானது. படம் வெளிவர இன்னும் நான்கு நாட்களே உள்ள நிலையில், டிரைலர் ரிலீஸ் செய்யப்படாமலே இருந்து வந்தது.
இந்நிலையில், இன்று இரவு 10 மணிக்கு வந்தா ராஜாவாதான் வருவேன் படத்தின் டிரைலர் ரிலீஸ் செய்யப்பட இருப்பதாக ட்விட்டர் பக்கத்தில் தகவல் வெளியாகி உள்ளது.