கடும் எதிர்ப்புகளுக்கிடையே தமிழகத்துக்கு மீண்டும் வருகிறார் மோடி- பிப்.10-ல் திருப்பூர் பிரசார கூட்டத்தில் பங்கேற்பு!

தமிழகத்தின் கடும் எதிர்ப்புகளுக்கு இடையே மீண்டும் வரும் பிப்ரவரி 10-ந் தேதி திருப்பூரில் நடைபெறும் பாஜக பிரசார பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார்.

மத்திய பாஜக அரசில் தமிழகத்தின் உரிமைகள் அனைத்தும் காவு கொள்ளப்பட்டன என்பது குற்றச்சாட்டு. தமிழகத்தின் துயரங்களில் மத்திய அரசு பங்கேற்கவில்லை என்பதும் புகார்.

இதனால் பிரதமர் மோடியின் தமிழக வருகைக்கு எதிராக ஒவ்வொருமுறையும் கறுப்புக் கொடி ஆர்ப்பாட்டம்; கறுப்பு பலூன்களை பறக்கவிடுதல் என போராட்டங்கள் தொடருகின்றன. மதுரையில் நேற்று எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டவும் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்கவும் மோடி வருகை தந்தார்.

இதற்கும் எதிர்ப்பு தெரிவித்து மதுரையில் மதிமுக பொதுச்செயலர் வைகோ தலைமையில் பல்வேறு இயக்கங்கள் கறுப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடத்தினர். மோடிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் எருமை மாடுகளை அவிழ்த்து விடும் போராட்டமும் நடைபெற்றது.

இதனால் மோடியின் நிகழ்ச்சிகள் அனைத்தும் சம்பிராதயமாக நடைபெற்று முடிந்தன. ட்விட்டரிலும் #Goback Modi #MaduraiThanksModi# என எதிர்ப்பு மற்றும் ஆதரவு ஹேஷ்டேக்குகள் டிரெண்டிங்காக்கப்பட்டு உலக அளாவிய இடத்தையும் பிடித்தன.

இந்நிலையில் திருப்பூரில் பிப்ரவரி 10-ந் தேதி நடைபெறும் தேர்தல் பிரசார கூட்டத்தில் மோடி பங்கேற்க உள்ளதாக பாஜக மேலிடப் பொறுப்பாளர் முரளீதரராவ் தெரிவித்துள்ளார்.

விடாது கறுப்பு!

More News >>