இந்து பெண்ணை தொட்டால் அந்த கை இருக்க கூடாது- மத்திய அமைச்சர் அனந்த்குமார் ஹெக்டே சர்ச்சை பேச்சு
இந்துக்களின் பெண்ணை தொடுபவர்கள் கை இருக்கக் கூடாது என மத்திய அமைச்சர் அனந்த்குமார் ஹெக்டே பேசியிருப்பது சர்ச்சையாகி உள்ளது.
மத்திய அமைச்சர்களின் சர்ச்சை பேச்சுகள் தொடர் கதையாகி வருகின்றன. இந்த வகையில் தற்போது அமைச்சர் அனந்த்குமார் ஹெக்டேவும் இணைந்துள்ளார்.
கர்நாடகா மாநிலம் கொடகு மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அனந்த்குமார் ஹெக்டோ, தேஜோ மகா ஆலயா என்ற சிவன் கோவிலை இடித்துவிட்டுதான் ஷாஜஹான் மனைவிக்கான தாஜ்மஹாலை கட்டினார். ஜாதி என்கிற விஷம் கடந்த 700-800 ஆண்டுகளில்தான் வந்தது.
ஷாஜஹான் தாஜ்மஹாலை முஸ்லிம்களை வைத்து கட்டி முடிக்கவில்லை. ஷாஜஹான் தமது வாழ்க்கை சரித்திரத்தில், ராஜா ஜெய்சிம்ஹா அரண்மை ஊழியர்களை வைத்தே அதை கட்டியதாக பதிவு செய்துள்ளார்.
எவனாவது இந்து பெண்ணின் கையை தொட்டால் அந்த கை அங்கே இருக்கக் கூடாது என்றார். அனந்த்குமார் ஹெக்டேவின் பேச்சுக்கு காங்கிரஸ் கட்சியின் தினேஷ் குண்டுராவ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.