சர்ஜிகல் ஸ்டிரைக் பற்றிய உரி படம் பார்த்து தியேட்டரில் உற்சாக கோஷமிட்ட நிர்மலா சீதாராமன்!

பெங்களூருவில் ராணுவ வீரர்களுடன் "உரி" படம் பார்த்த பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன் உணர்ச்சிவசப்பட்டு தேசபக்தி முழக்கங்களை எழுப்பினார்.

2016-ல் பாகிஸ்தானுக்குள் ஊடுருவி துல்லிய தாக்குதலை நடத்தியது இந்திய ராணுவம். ஒரே இரவில் உயிரைப் பணயம் வைத்து பாகிஸ்தான் ராணுவ, தீவிரவாதிகளின் முகாம்களை சின்னாபின்னமாக்கி 17 பேரை இந்திய ராணுவம் கொன்று குவித்தது.

இந்த சர்ஜுகல் ஸ்டிரைக் எனும் தாக்குதல் இந்திய ராணுவத்தின் வலிமையை உலகுக்கு பறைசாற்றும் வகையில் அமைந்தது. இதையே மையமாக வைத்து "உரி: தி சர்ஜுகல் ஸ்டிரைக்"என்ற பெயரில் திரைப்படமாக எடுத்துள்ளார் பிரபல பாலிவுட் இயக்குநர் ஆதித்ய தர்.

விக்கி கௌசால், யாமி கவுதம் நடிப்பில் பிரமாண்ட செலவில் எடுக்கப்பட்டு கடந்த 11-ந் தேதி ரிலீசான இந்தப் படம் நாடு முழுவதும் சக்கைப் போடுகிறது. ராணுவ தாக்குதல்களை தத்ரூபமாகவும், தேச பக்தியை பறை சாற்றும் இந்தப் படம் பெரும் வரவேற்பைப் பெற்று வசூலிலும் அள்ளிக் குவிக்கிறது.

சமீபத்தில் மும்பையில் பிரதமர் மோடி இந்தப் படம் குறித்து how’s the Josh என்று புகழ்ந்திருந்தார். இந்தப் படத்தை பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன் பெங்களூரு தியேட்டர் ஒன்றில் ராணுவ வீரர்களுடன் அமர்ந்து பார்த்தார்.

தியேட்டரில் இருந்து படம் முடியும் வரை சந்தோசத்தில் பாரத் மாதா கீ ஜே ..கோஷம் எழுப்பி உற்சாகமாக படம் பார்த்தார். தியேட்டரில் படம் பார்த்த சந்தோஷ தருணம் பற்றிய படங்களை டிவிட்டர், பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார் நிர்மலா சீதாராமன்.

More News >>